கனிமொழி எம்பியுடன் தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் சந்திப்பு!

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் கனிமொழி எம்பியை சந்தித்து மனு அளித்தனர்.

Update: 2024-10-08 10:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி பிரஸ் கிளப் 2024 – 2026ம் ஆண்டிற்கு தேர்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் செயலாளா் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ், பொருளாளர் ராஜு, உள்ளிட்ட நிர்வாககுழுவைச் சேர்ந்தவர்கள் சங்க ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக எம்.பி. கனிமொழி கருணாநிதியைஅவரது குறிஞ்சி நகர் முகாம் இல்லத்தில்நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருவது குறித்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு மற்றும் மூன்றாவது கட்டங்களாக அரசின் சலுகை வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா இதுவரை நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனை கனிவோடு பெற்றுக்கொண்ட எம்.பி கனிமொழி கருணாநிதி100 சதவீதம் தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகளோடு மன்ற கௌரவ ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான எம். ஆத்திமுத்து, பாலகிருஷ்ணன், பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன், தீக்கதிர் குமார், முத்துராமன், ராஜன், டேவிட் ராஜா, செந்தில் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News