நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு போராடும் மக்களை ர்மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை நகராட்சியுடன் ரூரல் ஊராட்சியை இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு;  கிராமத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஆர்டிஓ பேச்சுவார்த்தை- மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை அழைப்பு

Update: 2024-10-08 12:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
.  மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் அரசின் முடிவை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ரூரல் ஊராட்சியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியில் பந்தல் அமைத்து அப்பகுதி மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி இரண்டாவது நாளாக நடத்தி வருகின்றனார். மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா,காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்,  மாவட்ட ஆட்சி மகாபாரதி ஊராட்சி மக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததன்பேரில்,  போராட்டத்தை தொடர்ந்தபடி ரூரல் மற்றும் வண்ணமந்தல் ஊராட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்

Similar News