ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விலை உயர்ந்த சின்னவெங்காயம்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.65க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2024-10-08 13:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.65க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஒட்டன்சத்திரம் சுற்றிய கிராமப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடை வெங்காயம் பயிரிட்டனர். அவற்றை அறுவடை செய்யும் போது விலை குறைவாக இருந்ததால் பறித்த வெங்காயத்தை மூங்கில் பட்டறைகளில் வைத்து சேமித்தனர். அறுவடை சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ.65க்கு விற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில்,''தீபாவளி வர உள்ள நிலையில் வரத்து குறைய சின்ன வெங்காயத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் விலை ஏறுமுகமாக உள்ளது'' என்றார்.

Similar News