புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம், குலமங்கலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற கீரமங்கலம் காவல்துறையினர் மாரியம்மன் டீக்கடை அருகே தர்மராஜ் (42) லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து லாட்டரி சீட்டுகள் 110, ரொக்கம் ரூ.1,090, செல்போன் ஒன்று, ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஒன்று, கைப்பற்றி அவரை கைது செய்தனர்.