திருவரங்குளம் அம்மன் நகரில் வசிக்கும் நம்பிராஜா, இவருடைய 14 வயது மகள் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று 7-ம் தேதி மாலை 4:30 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றார். எங்க தேடியும் கிடைக்கவில்லை, இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர்கள் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.