திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் திருச்சியில் அமைச்சர் நேருவை இன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.