திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை மாநகராட்சி துணை மேயர் ராஜு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள ஆசிரியர்களிடம், மருத்துவர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை அவர் நடத்தினார். இந்த ஆய்வின் போது திமுகவினர் உடன் இருந்தனர்.