காக்காவீரியன்பட்டி- டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயம்.

காக்காவீரியன்பட்டி- டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயம்.

Update: 2024-10-10 07:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காக்காவீரியன்பட்டி- டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, வள்ளியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அன்னபூரணி வயது 32. அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி அம்சவல்லி வயது 30. இவர்கள் இருவரும் அக்டோபர் 8-ம் தேதி காலை 8:15- மணி அளவில், மைலம்பட்டியில் இருந்து பஞ்சப்பட்டி செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூவீலரை அன்னபூரணி ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் காக்காவீரியம்பட்டி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே வந்தபோது, எதிர் திசையில், அருகில் உள்ள மாவத்தூர் கிராமம், முத்து கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜா மகன் நிதிஷ்பாபு வயது 24 என்பவரும், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 28 ஆகிய இருவரும் எதிர் திசையில் மற்றொரு டூவீலரில் வேகமாக வந்து, அன்னபூரணி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு வாகனத்திலிருந்தும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில், அம்சவல்லி, அன்னபூரணி, தமிழ்செல்வன் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், அன்னபூரணி மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், அம்சவல்லியை கரூர் அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அன்னபூரணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நிதிஷ் பாபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Similar News