தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17 தினங்களாக போராடி வருகிறார்கள். இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் மத்திய அரசு அலுவலகமான அஞ்சலகம் முன்பு, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் துரைசாமி தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகி சித்ரா, லட்சுமி, சின்னத்தாயி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லக்காபாளையம் ஊராட்சியில் வாடகை வீடுகளில் சில ஆண்டுகளாக குடியிருந்து வரும் சொந்தமாக வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர் அவர்களுக்கு நிலம் வழங்கப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு புறம்போக்கு நிலங்களை தாரை வார்க்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கைகளை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், இந்த தீர்மானங்கள் குறித்து அக். 15ல் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையீடு செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன் நன்றி கூறினார்.