கரூர்-சீனாவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சிறப்பான வரவேற்பு

கரூர்-சீனாவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சிறப்பான வரவேற்பு

Update: 2024-10-12 04:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர்-சீனாவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு சிறப்பான வரவேற்பு சீனாவில் நடந்த கராத்தே போட்டியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக தனது தந்தையிடம் கராத்தே கற்று வந்தார். இந் நிலையில், கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை சீனாவில் உள்ள கியாஞ்சின் என்ற இடத்தில் உலகளாவிய கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து 6 பேர் மட்டுமே பங்கேற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் சஞ்ஜீவ் மட்டுமே கலந்து கொண்டு (குமுத்தே) சண்டை பிரிவில் கஜகஸ்தான், சீனா, ரஷ்யா மாணவர்களை எதிர் கொண்டு சண்டையிட்டதில் நூலிலையில் தோற்று முதல் பரிசை தவற விட்டு, 2ம் பரிசை வென்றார். கட்டாப் பிரிவில் 3ம் இடம் பிடித்தார். கராத்தே சண்டை பிரிவில் இந்தியாவில் இதுவரை யாரும் வெற்றி பெறாத நிலையில், இச்சிறுவன் முதன் முதலாக வெற்றி பெற்று இந்தியாவிற்கும், கரூருக்கும் பெருமை சேர்த்து இருப்பதாக அச்சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

Similar News