சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து
கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஐந்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் படுகாயம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஐந்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் படுகாயம் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார் திருவள்ளூர் அருகே விரைவி ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் 12 பெட்டிகள் தடம் புரண்ட தோடு பலர் சிக்கி காயம் அடைந்தனர். கர்நாடகம் மாநிலம் மைசூருரிலிருந்து பிகார் நோக்கி சென்னை வழியாக சென்ற தர்பங்கா விரைவு ரயில் இன்று மைசூரில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு பொன்னேரியை கடந்து கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே வந்த போது சுமார் 8:30 மணி அளவில் விரைவு ரயில் சரக்கு ரயில் மீது மோதியது.இந்த விபத்தில் 7 குளிர்சாதன பெட்டிகள் தடம் புரண்டதில் ரயில் பெட்டிகளும் தீப்பிடித்து எறிந்தன பலர் சிக்கி காயம் அடைந்தனர். அதோடு சரக்கு ரயில் தீப்பற்றியது. இந்த விபத்தில் பலர் சிக்கி காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கும்மிடிப்பூண்டி,பொன்னேரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தலா 2 தேசிய பேரிடர் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயில் விபத்தில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்ட தில் உருக்குலைந்து. அதில் ஏதாவது சிக்கி உள்ளனர் என்பது குறித்து எதுவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கவில்லை. இந்த விபத்து சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டமாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த ரயில் 8 மாநிலங்களை கடந்து 3150 கடந்து ஒரு வாரத்தில் பிகாருக்கு புறப்பட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. சரக்கு ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தால் சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கங்களில் வட மாநிலம் செல்லக்கூடிய ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ரயில்வே போலீசார் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்