நத்தம் அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு

நத்தம் அருகேயுள்ள நாயக்கர்வலசு கரந்தமலை வனப்பகுதியில் மலை உச்சியில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்தினர்

Update: 2024-10-14 04:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகேயுள்ள செங்குறிச்சி- நாயக்கர்வலசு கரந்தமலை வனப்பகுதியில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள மூங்கில் மலையாண்டி, கருப்பணசாமி, கிருஷ்ணன் மற்றும் கன்னிமார் கோயிலில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வலியுறுத்தியும் வத்தலதோப்பம்பட்டி மட்டும் அதைச்சுற்றியுள்ள கிராமகளை சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வழிபாடு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வழிபாட்டில் சிறப்பு அம்சமாக ஊரவைத்த அரிசியுடன் நாட்டு சக்கரை கலந்து படையல் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.கோயில் பூசாரி சாமியாடி குறி சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் திரளான ஆண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News