பாண்டமங்கலம் அருகே பெண்ணை ஏமாற்றி நகை பறிக்க முயன்ற வட மாநில இளைஞர் இரண்டு பேர் கைது.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் பெண்ணை ஏமாற்றி நகை பறிக்க முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர்களை போலீசார் கை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-10-16 15:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர். அக். 16: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த சூர்யாபிரகாஷ் என்பவரின் மனைவி தாரணி (22), இவர் இன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே இருந்து வடமாநிலத்தை சேர்ந்த இருவர் தங்கச்செயின், வெள்ளி பொருட்களுக்கு பாலிஷ் போட்டு தருவதாக தாரணியிடம் கூறியுள்ளனர். நீங்கள் ஒன்றும் பாலிஷ் போட்டு தரவேண்டாம் என தாரணி கூறியும் அவர்கள் இருவரும் அடம்பிடித்து காலில் அணிந்திருந்த கொலுசுவை கழட்டி தாருங்கள் என கூறிய நிலையில் இருவரும் தொடர்ந்து அடம் பிடித்ததால் தாரணி கொலுசுவை கழட்டி வழங்கியுள்ளார். பின்னர் இருவரும் ஒரு டப்பாவில் ஒரு விதமான பவுடரை கலந்து கொலுசுவை பாலிஷ் செய்து தாரணியிடம் வழங்கி விட்டு உடனடியாக இருவரும் அங்கிருந்து வேகமாக நடந்து சென்று விட்டனர். இதில் சந்தேகம் அடைந்த தாரணி, கொலுசுவின் எடை குறைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உறவினரிடம் கூறியுள்ளார், அவர் ஏற்கனவே இந்த இருவரும் தங்கம் பாலிஷ் போட்டு கொடுத்து ஏமாற்றியதாக என அவர் கூறியதை கேட்ட தாரணி மற்றும் உறவினர்கள் பாலிஷ் போட்டு ஏமாற்றி விட்டு சென்ற இருவரையும் தேடினர். அப்போது பாண்டமங்கலம் தண்ணீர் தொட்டி அருகே சென்று கொண்டிருந்த இருவரையும் மடக்கி பிடித்து அடித்த நிலையில் இதனை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் பரமத்தி வேலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (33), தருண்குமார் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News