விராலிமலை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மலையரசன்(96). இவர் கடந்த 11ம் தேதி விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயி லுக்கு வந்தார். வயது மூப்பு காரணமாக தடுமாறிய படி நடந்து வந்த அவர் கோயில் அடிவாரத்தில் உள்ள எச்சில் பொறுக்கி ஆறுமுகசாமி குடகு அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.