கெங்கவள்ளியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கிய பாமகவினர்

அரசியல்

Update: 2024-10-18 14:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவள்ளியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை ஒட்டி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கிய பாமகவினர் சேலம் மாவட்டம், கெங்கவல்லிஅரசு மருத்துவமனையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் 56 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லி பேரூர் பாமக சார்பில்மருத்துவ காலத்தில் தேவையான படுக்கைகள், போர்வை உள்ளிட்டவைகளை வழங்கினர்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் மாவட்ட தலைவர் பச்சமுத்து பேரூர் செயலாளர் பூபதி ஒன்றிய செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆத்தூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகில் மரக்கன்றுகளையும் நட்டனர்.

Similar News