நினைவாற்றல் அதிகப்படுத்தும் பயிற்சியில் பங்கேற்ற நவோதயா பள்ளி மாணவர்கள்.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நினைவாற்றல் அதிகப்படுத்தும் பயிற்சி அக்னிச் சிறகுகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தியது.

Update: 2024-10-19 12:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கடந்து 16.10.24 அன்று புதன் கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் நினைவாற்றல் அதிப்படுத்தும் பயிற்சிகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புகளை அக்னிச் சிறகுகள் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒருங்கினைப்பாளர் தென்றல் நடத்தினார்கள் இந்த நிகழ்ச்சியினை “பள்ளியின் செயலாளர் தனபால் அவர்களும் மற்றும் பொருளாளர் தேனருவி அவர்களும் தலைமையேற்று நடத்தினார்கள் பொருளாளர் பேசுகையில் இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கக்கூடிய விசயம் நினைவாற்றல் திறன். உளவியில் அடிப்படையில் மாணவர்களின் நினைவாற்றல் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது, உணவு முறை, ஆர்வம் இன்மை, மீடியாக்கள் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் நினைவாற்றலை இழக்கின்றனர். அதனால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர் அதனைப் போக்குவதற்கே இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறி மாணவர்கள் இதனை முழுமையாகப் பயன் படுத்தி தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்று கூறினார்.” அக்னி சிறகுகள் தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கினைப்பாளர் உளவியலாளர் தென்றல் ஒவ்வெரு வகுப்பிற்கும் தனித்தனியாக கவனம், கவனமாற்றம் கவனச்சிதைவு போன்ற பிரச்சனைகளுக்கு எளிமையான பயிற்சி வகுப்புகளையும், மனதை வலிமை படுத்தும் தியானமுறைகள், முத்திரைகள் செய்முறைகளை மாணவர்களுக்கம் ஆசிரியர்களுக்கும் செய்துகாட்டினார்கள். மிகவும் பயனுடையதாக இருந்தது. பள்ளி முதல்வர் அனைவருக்கும் நன்றி கூறி இந்தப் பயிற்சி முறைகளை தினமும் பின் பற்றினால் கண்டிப்பாக ஒவ்வொரு மாணவர்களும் வெற்றியாளராக வரலாம் என்று வாழ்த்தினார்.

Similar News