ஆண்டிபட்டி அருகே வீடு இடிந்து பெண் உயிரிழப்பு
தொப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (55). வீட்டின் மேற்கூரை வீடு இடிந்து விழுந்ததில் சின்னப்பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார்
தேனி அடுத்த மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட தொப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (55). இவர் பழைய கான்கிரீட் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (அக்.18) நள்ளிரவு பெய்த கன மழையில் வீட்டின் மேற்கூரை வீடு இடிந்து விழுந்ததில் சின்னப்பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை மயிலாடும்பாறை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கடமலைக்குண்டு போலீஸார் சின்னப்பொண்ணு உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்புதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.