வேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி பூஜை.

வேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.;

Update: 2024-10-20 16:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர் அக். 20: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் அமைந்துள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் முன்னதாக சுவாமிக்கு பால்,பன்னீர்,பஞ்சாமிர்தம்,மஞ்சள் திருமஞ்சல் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News