சாலையில் வழிந்து நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி.
ஜேடர்பாளையம் அருகே சாலையில் வழிந்து நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர், அக்.21: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரை ஆத்தூர் பஞ்சாயத்து உட்பட்ட தெற்கு தொட்டிபாளையம். இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் மழைநீர் அதிகளவு செல்கின்றது.தொட்டிபாளைய செல்லும் வழியில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய நிலங்களில் அதன் உரிமையாளர்கள் கான்கிரீட் சுவர் அமைத்துல்லாதல் மழைநீர் செல்லும் பாதை தடைபட்டுள்ளது. இதனால் மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலையில் சுமார் 500 அடி தூரத்திற்கு முழங்கால் அளவில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலையில் வாகனத்தில் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் பள்ளி வாகனம் அதிகளவு தண்ணீர் செல்வதால் பழுது ஏற்படுவதாக கூறி ஊருக்குள் வர மறுக்கின்றனர். நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள்,வேலைக்கு செல்பவர்கள் முழங்கால் அளவு மழை நீரில் இறங்கி நடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனம் மழை நீரில் மூழ்குவதால் பழுது ஏற்படுவதாகவும், நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மாற்றுப்பாதையில் நான்கு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பொது மக்கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக மழைக்காலங்களில் இதே சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் தண்ணீர் தேங்குவதை சீரமைத்து உடன் தீர்வு காண வேண்டு என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.