காமராஜ் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை தினம் அனுசரிப்பு!
கோவில்பட்டி நாடார் காமராஜ் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை தினம் அனுசரிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு ஆணையாளரின் ஆணைப்படி உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் வழிகாட்டுதலின்படி இன்று உலக அயோடின் பற்றாக்குறை தின விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் உறுதிமொழி அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் கயந்தார் யூனியனைச் சார்ந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மற்றும் பயிற்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஹரி ஞான சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு அயோடின் பற்றாக்குறையின் அவசியத்தை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர். கலப்படம் செய்யப்படும் பொருட்களையும், கலப்படத்தினால் ஏற்படும் மாற்றத்தினையும் செய்முறையோடு விளக்கிக் காட்டினர். பின்னர் இது சார்ந்த காணொளி காட்சியும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உலக அயோடின் பற்றாக்குறை தின உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். பள்ளி முதல்வர் பிரபு வரவேற்றார். அறிவியல் ஆசிரியர் ராஜா நன்றி கூறினார். ஆசிரியர்கள் மோகனப்பிரியா, மாரிச்சாமி, பிரியங்கா, ராமமூர்த்தி உட்பட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.