எம்.பி.ராஜேஷ்குமார் பல கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மக்கள் தொடர்பு முகாமில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2024-10-24 11:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், திண்டமங்கலம் கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பில் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மகளிருக்கு பேருந்துகளில் இலவச விடியல் பயணம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடே போற்றும் வகையில் ஏழை மக்களுக்கு வீடு கட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் என சுமார் 6,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மகளிர் சுய தொழில் தொடங்கிட கடனுதவி, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட மாதம் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000/- என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நம் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில், ரூ.298.02 கோடி செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.365.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.146.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 16,031 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள். குறிப்பாக நாமக்கல் மாநகராட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைத்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பால்பதன ஆலை அமைக்க அடிக்கல் நாட்டினார்கள். மேலும், நாமக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கும் நாமக்கல்லுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.10.00 கோடி நிதி ஒதுக்கப்படும், சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக, குளிர்பதனக் கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும், மோகனூரில் இருக்கும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்று பெயரிடப்பட்டு, இன்னும் சிறப்பாக செயல்பட, இந்த ஆலையின் எத்தனால் உற்பத்தி அலகு ரூ.4.00 கோடி செலவில் மேம்படுத்தப்படும் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வரக்கூடிய, நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் 30 கோடி ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்படும் என 4 முத்தான திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டு, அரசின் திட்டப்பணிகளை கடைகோடி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள் எனவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் எடுத்துக்காட்டாகவும், முன்னோடியாகவும் உள்ளார்கள் என பாராட்டி பெருமைப்படுத்தி உள்ளார்கள். இத்தகைய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கிடைத்தது நம் மாவட்டத்திற்கான பெருமை ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்ட அரசு விழாவில் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 1997 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து நாமக்கல் மாவட்டம் தனியாக தோற்றுவிக்கப்பட்டது. புதியதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு என புதியதாக மத்திய கூட்டுறவு வங்கியினை அறிவித்துள்ளார்கள். மேலும், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கிட நாமக்கல் மாவட்டத்தில் 850 ஹெக்டர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கிட இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாமக்கல் அரசு மருத்துவமனை பல்வேறு நவீன சிகிச்சை வசதிகளுடன் தனியார் மருத்துவமனைகளை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ தெரிவித்தார். தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000/- மதிப்பில் ஊட்டசத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.08 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயக்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் ரூ.2.750/- மதிபில் காதொலிக்கருவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 7 நபர்களுக்கு ரூ.2.64 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.44,539/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.53,930/- மதிப்பில் வேளாண் கருவிகள், கூட்டுறவு துறை சார்பில் 25 நபர்களுக்கு ரூ.22.07 இலட்சம் மதிப்பில் பயிர்கடன், 5 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.59.00 இலட்சம் மதிப்பில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் ரூ.1.15 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.12.50 இலட்சம் மதிப்பில் தொழில் கடனுதவி, தோட்டக்கலை துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2.95 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், முன்னோடி வங்கி சார்பில் 1 நபருக்கு ரூ.1.40 இலட்சம் மதிப்பில் கடனுதவி, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், வருவாய்த்துறை சார்பில் 1 நபருக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 2 நபர்களுக்கு ரூ.40,000/- இயற்கை மரண உதவித்தொகை, 1 நபருக்கு கல்வி உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 11 பயனாளிகளுக்கு இணையவழி சான்றுகள், 1 நபருக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணை, 40 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணை, 24 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாறுதல், 53 பயனாளிகளுக்கு மனைவரி தோராய பட்டா நகல் என மொத்தம் 200 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ராமசாமி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், வேளாண்மை இணை இயக்குநர் பொ.பேபிகலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எம்.புவனேஸ்வரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.ஈ.மாரியப்பன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், வட்டாட்சியர் சி.சீனிவாசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News