சங்கரன்கோவில் அருகே விஷ செடியை உண்ட மாடுகள் உயிரிழப்பு

விஷ செடியை உண்ட மாடுகள் உயிரிழப்பு

Update: 2024-10-25 01:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடி டி.என்.புதுக்குடி பகுதியை சேர்ந்த முத்து என்பவரது 5 மாடுகள் நேற்று மாலையில் சமுத்திரம் என்ற குளத்துப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், அங்குள்ள சில விஷத்தன்மையுடைய செடிகளை உண்டதால் அடுத்த சில மணி நேரத்தில் உடல் பருத்து மாடு உயிரிழந்தன. இறந்த மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விஷத்தன்மையுடைய செடிகளை உண்டு மாடு இறந்த சோகத்தினால் இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News