சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

Update: 2024-10-30 01:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெற்றது. இக்கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சப்பரத்தில் வீதியுலா வந்தனா். 11ஆம் நாளான திங்கள்கிழமை கோயில் முன் பிரதான சாலையில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இரவில் சங்கரநாராயண சுவாமி சந்நிதியில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைக்குப் பின்னா் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, நேற்று இரவு சுவாமி-அம்பாள் பட்டணப் பிரவேசத்துடன் திருவிழா நிறைவடைந்தது.

Similar News