விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: போலீசார் விசாரணை!

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-10-30 13:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தோழப்பன்பண்ணை சுற்றுவட்டார கிராமங்களில் கால்நடைகள் விஷம் வைத்து கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இன்றும் மேய்ச்சலுக்கு சென்ற 4 ஆடுகள் விஷம் தின்று இறந்துள்ளன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News