இராசிபுரம்: குருசாமிப்பாளையத்தில் பலத்த மழை.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள குருசாமிப்பாளையத்தில் மதியம் 2 மணி முதல் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

Update: 2024-10-31 10:18 GMT
நாமக்கல் மாவட்டத்தில் சில தினங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது இதனிடையே இராசிபுரம் அடுத்துள்ள குருசாமி பாளையத்தில் மதியம் 2 மணி முதல் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்ததால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நனைந்தபடியே ஆங்காங்கே நின்று சென்றனர் இராசிபுரம் குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வானமே மேகமூட்டமாக இருப்பதும் அவ்வப்போது மழை பெய்து வருவதும் பொதுமக்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Similar News