வறண்டு கிடக்கும் நிலமெல்லாம் வளம் பெற வேண்டும் விவசாயிகள் சார்பில் வேண்டுகோள்.

வறண்டு கிடக்கும் நிலமெல்லாம் வளம் பெற வேண்டும் விவசாயிகள் சார்பில் வேண்டுகோள்.

Update: 2024-10-31 09:44 GMT
வறண்டு கிடக்கும் நிலமெல்லாம் வளம் பெற வேண்டும் விவசாயிகள் சார்பில் வேண்டுகோள். சிவகங்கை மாவட்டம், மாம்பட்டி ஊராட்சியில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து அரசை எதிர்பார்க்காமல், குளம் அமைத்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து குழாய்கள் அமைத்து தண்ணீரைக் கொண்டு வந்து விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்திய காணொளி காட்சி வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்து கரூர் மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு நல சங்க தலைவர் ஈசநத்தம் செல்வராஜ் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அதில் கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகள் அதிகப்படியான வெப்பத்தை உமிழ்ந்து வருவதால் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதோடு, விளைநிலங்களும் வறண்டு கிடக்கிறது. எனவே, அரசு காவிரியில் அதிகப்படியாக சென்று வீணாகும் நீரையும், குடகனாறு ஆற்றின் நீரை பெறும் உரிமையையும் மீட்டெடுத்து தர வேண்டும். இதே போல நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி குழாய்கள் மூலம் நீரை கொண்டு வந்து வானம் பார்த்த பூமி எல்லாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மண்ணின் மைந்தர் அமைச்சர் செந்தில் பாலாஜியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News