மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா..
திருவாரூரில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா நிகழ்ச்சியில் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு கலைச்சேவை விருதினை தருமபுரம் ஆதீனம் வழங்கி கௌரவித்தார்.
திருவாரூர் சன்னதி தெருவில் தனியார் அமைப்பு சார்பில் மார்கழி மாத பக்தி தமிழ் இன்னிசை விழா மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது . இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் வாழ்த்துரை வழங்கினார் . சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது . தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குபவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலை சேவை விருதினை பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் ஆதினம் வழங்கினார்.