சூளகிரி வட்டாரத்தில் ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

சூளகிரி வட்டாரத்தில் ரபி பருவம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

Update: 2025-01-05 01:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரம் செக்காருலு கிராம ஊராட்சியில் ரபி பருவ கிராம வேளாண் முன்னேற்றக் குழு குறித்த பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கப்பையா, அதியமான் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், பட்டு வளர்ச்சித் துறை இளநிலை ஆய்வாளர் கல்யாணசுந்தரம், உதவி தோட்டக்கலை அலுவலர் திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் சிறுதானியம், பயறு வகைகளைப் பயிரிட்டு மானியங்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விதைகள் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும் என்றும் விவசாயிகள் விதைப்பண்ணைகள் அமைத்து கூடுதல் இலாபம் அடையலாம் என்றார்.

Similar News