இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025 இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ வெளியிட்டார். 06.01.2025 வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 166-திருத்துறைப்பூண்டி(தனி) சட்டமன்றத் தொகுதியில் 1,17,501 ஆண்கள், 1,23,521 பெண்கள், 15 இதரர் உள்ளிட்ட மொத்தம் 2,41,037 வாக்காளர்களும், 167-மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் 1,24,594 ஆண்கள், 1,33,738 பெண்கள், 8 இதரர் மொத்தம் 2,58,340 வாக்காளர்களும், 168 திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1,37,519 ஆண்கள், 1,46,760 பெண்கள், 29 இதரர் மொத்தம் 2,84,308 வாக்காளர்களும், 169 நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1,38,543 ஆண்கள், 1,42,395 பெண்கள், 17 இதரர் மொத்தம் 2,80,955 வாக்காளர்கள் உள்ளிட்ட ஆக மொத்தம் 10,64,640 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.