கோவை வடக்கு: போதை மாத்திரை விற்பனைக்கு வைத்தவர் கைது !
ஜண்டா மற்றும் போதை மாத்திரையை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரிய நாயக்கன் பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் ஜோதிபுரம் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு வைத்து இருந்த ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் (32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.