கம்பைநல்லூரில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா
கம்பைநல்லூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தினசரி பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஜனவரி 07 மாலை திமுக மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் ராஜ்கமல் ஏற்பாட்டில் கம்பைநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் 150 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சரும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான P. பழனியப்பன் சீருடை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் செங்கண்ணன், ரத்தினவேல், பேரூராட்சி செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.