காரிமங்கலம் வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு காரிமங்கலம் வாரச் சந்தையில் 84 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெற்று வருகிறது இதனைகள் ஜனவரி 07 நேற்று நடைபெற்ற சிறப்பு வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களுக்கான கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர்.நேற்று 400க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் 8000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை என மாடுகள் சுமார் 30 லட்சத்திற்கு விற்பனையானது. 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆடுகள் 3000 ரூபாய் முதல் 22,000 வரை என 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது நாட்டுக்கோழிகள் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து 300 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையில் என 4 லட்சத்திற்கு விற்பனையானது ஒட்டுமொத்தமாக நேற்றைய சந்தையில் 84 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கால்நடைகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.