ராணிப்பேட்டையில் ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பி வைப்பு

ரேஷன்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு அனுப்பிவைப்பு-ஆட்சியர் ஆய்வு!

Update: 2025-01-08 02:56 GMT
பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு முழு நீளகரும்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 70 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 701 தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்ச ரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதறகாக கூட்டுறவுத் துறையின் மூலம் செங்கரும்புகள் கடலூர் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த பணிகளை கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணைப் பதிவாளர் (பொது விநியோகம்) சிவமணி, கூட்டுறவு சார்பதிவாளர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News