கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை , ஈசாந்தி மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆர்.அழகுமீனா, நேற்று று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தலா ரூ.3.10 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 3 வீட்டுகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கட்டுமான பணிகள் தொய்வின்றி நடைபெற பயனாளிகளுக்கு தேவையான சிமெண்ட், கம்பிகள் கொடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது. கோமதி நாயகம் என்பவருக்கு மேற்கொண்டு பணிகளை தொடர தேவையான வங்கி கடனுதவி பெற்று வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் இரண்டு பணியாளர்கள் தங்களுக்கான பணி நாட்கள் முடித்துவிட்டது. எனவே தங்களுக்கு பணி நாட்களை நீடித்து தரும்படி கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கூறினார். நடைபெற்ற ஆய்வுகளில் உதவி திட்ட அலுவலர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.