தொழிலாளர்களுக்கு கலைஞர் கைவினை திட்ட விழிப்புணர்வு

பென்னாகரம் தமிழ்நாடு அனைத்து அமைப்பு சாரா மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக கலைஞர் கைவினை திட்ட விழிப்புணர்வு நடைபெற்றது

Update: 2025-01-08 01:47 GMT
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பாக கட்டுமான பென்னாகரம் அலுவலகத்தில் கலைஞர் கைவினை திட்டம் விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுய வேலைவாய்ப்பு செய்ய ஆர்வமுள்ள மற்றும் கைவினை கலைஞர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விதமான நல திட்டங்களை அறிமுகப்படுத்தி மானிய திட்டங்களை வழங்கி வருகிறது அதனை முறையாக பயன்படுத்தி தொழில் வளர்ச்சியில் வீட்டையும் நாட்டையும் உயர்ந்த முயற்சி செய்வோம் என கூட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News