நெல்லை மாநகர அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா அப்பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது.பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த பூங்காவில் மாலை நேரத்தை கழிக்க செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்த பூங்காவில் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.நீர் தேக்கம் காரணமாக பூங்காவின் மொத்த அமைப்பு சீரழிந்து காணப்படுகின்றது.