மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிகவினர் மனு
பொங்கல் பரிசு ரூபாய் ஆயிரம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிகவினர் மனு அளித்தார்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும். பெஞ்சம் புயலில் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்க வேண்டும். பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் ஆயிரம் பரிசாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் ஆர்ப்பாட்டமாக நடத்திவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்குகளை மனுவாக வழங்கினார்கள்.