போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுகள்.
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு 23.12.2024 முதல் 31.12.2024 வரை திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் திருக்குறள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.சௌம்யா (திருவாரூர்), திரு.யோகேஸ்வரன் (மன்னார்குடி), மாவட்ட மைய நூலகர் முருகன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.