சிவகிரியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஆய்வு

கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஆய்வு

Update: 2025-01-05 01:46 GMT
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை காவல்துறை மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் பாா்வையிட்டனா். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதையடுத்து, வருவதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன், புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோரது ஆலோசனையின்பேரில் சிவகிரி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, காவல் ஆய்வாளா் சண்முக லட்சுமி, உதவி ஆய்வாளா் வரதராஜன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். தேசிய நெடுஞ்சாலையில், சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Similar News