கிருஷ்ணகிரியில் மிதிவண்டி போட்டி: 169 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரியில் மிதிவண்டி போட்டி: 169 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

Update: 2025-01-05 01:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான அறிஞா் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 169 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். முதலிடம் பெற்றவா்களுக்கு 5,000 ரூபாய், 2-ம் இடம் பெற்றவா்களுக்கு ரூ3,000, ரூபாய், 3-ஆம் இடம் பெற்றவா்களுக்கு 2,000 ரூபாய், மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Similar News