நலத் திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே நலத் உதவிகளை திமுகவினர் வழங்கினார்கள்

Update: 2025-01-05 01:31 GMT
மதுரை தெற்கு மாவட்டம் கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கள்ளிக்குடி சத்திரம் மற்றும் V.T மணி நகரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (ஜன.4)நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என 800 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர், மாவட்ட திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News