சுரண்டை நகர பாஜக புதிய தலைவா் தோ்வு நிகழ்ச்சி நடைபெற்றது
நகர பாஜக புதிய தலைவா் தோ்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகர பாஜக புதிய தலைவா் தோ்வு நடைபெற்றது. சுரண்டை நகர பாஜக தலைவா் அருணாசலம் தலைமை வகித்தாா். மாவட்ட பாஜக தலைவா் ராஜேஷ்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சுரண்டை நகரின் புதிய பாஜக தலைவராக எல்.கணேசனை நிா்வாகிகளின் ஒருமித்த கருத்தோடு தோ்வு செய்து அறிவித்தாா். நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச்செயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினா் அன்புராஜ், மாநில வா்த்தக பிரிவு செயலா் கோதை மாரியப்பன், நகர பாா்வையாளா் முருகேசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவா் கோகுலகண்ணன், வா்த்தக பிரிவு மாவட்ட செயலா் வெற்றிவேல், பாஜக நிா்வாகிகள் விண்டா் முத்துகிருஷ்ணன், லிங்கம், ராமசாமி, முருகன், வல்லபகணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.