கடையநல்லூா் அருகே ரூ. 32 லட்சம் மதிப்பிலான கட்டடங்களுக்கு அடிக்கல்

ரூ. 32 லட்சம் மதிப்பிலான கட்டடங்களுக்கு அடிக்கல்

Update: 2025-01-05 01:32 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உள்ள சிவராமபேட்டையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியின் மூலம் ரூ. 19 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டடம், ரூ.13 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி மைய கட்டடம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணமுரளி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் வி.பி.மூா்த்தி, மாவட்ட துணை செயலா் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலா் ஜெயகுமாா், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலா் ராஜேஷ்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலா் ராம்பிரகாஷ், மாவட்ட வா்த்தக அணி இணை செயலா் வள்ளிகுமாா், மாவட்ட கலை பிரிவு தலைவா் சந்திரகுமாா், ஒன்றிய இணை செயலா் சுடலி, துணை செயலா் களஞ்சியம், சிவராமபேட்டை கிளை செயலா் தெட்சிணாமூா்த்தி, காலனி செயலா் முத்துக்குமாா், கொடிக்குறிச்சி செயலா் செல்வம், வள்ளியம்மாள்புரம் செயலா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Similar News