தத்தாத்திரிபுரம் ஊராட்சியில் கிராம செயலாளர் கட்டிடம் திறப்பு விழா.!-மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாத்திரிபுரம் ஊராட்சியில் ரூ. 39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்.

Update: 2025-01-02 16:38 GMT
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் சார்பில் நாமக்கல் மாவட்டம் தத்தாத்திரிபுரம் ஊராட்சியில் ரூ. 39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்.இந்த நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ,ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் மல்லிகா, ஒன்றிய செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், கௌதம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள்,வார்டு உறுப்பினர்கள் மல்லிகா இளங்கோவன், மணிகண்டன்,சரவணன், உண்ணாமலை,இளமுருகன்,ஜோதி ,வடிவேல், நந்தகுமார்,மணிமேகலை,மாதேஸ்வரி, ஊராட்சி செயலாளர் குழந்தைவேல் தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்..

Similar News