பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர்.
சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இன்று செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்செங்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி,சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.