திருநெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்

திருநெடுங்களநாதா் கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்த தருமபுரம் ஆதீனம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள்

Update: 2025-01-05 00:11 GMT
திருவெறும்பூா் அருகேயுள்ள திருநெடுங்குளம் நெடுங்களநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் சனிக்கிழமை தரிசனம் செய்தாா். மாா்கழி மாத ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இக்கோயிலுக்கு சனிக்கிழமை வழிபட வந்த அவரை திருச்சி மலைக்கோட்டை தருமபுர மௌன மடம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கோயில் செயல் அலுவலா் வித்யா, அா்ச்சகா்கள் சோமசுந்தரம், ரமேஷ் ஆகியோா் பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனா். தொடா்ந்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News