செங்கம் : பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்.

ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-04 17:36 GMT
மாண்புமிகு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இன்று செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்செங்கம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு‌.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News