அதிமுக சசிகலா சார்பில் ராசிபுரத்தில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்..
அதிமுக சசிகலா சார்பில் ராசிபுரத்தில் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்..
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் சசிகலா அவர்களின் ஆணைக்கிணங்க கட்சி நிர்வாகிகளுக்கும் ,தொண்டர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பரிசு மற்றும் இனிப்பு வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் அவர்கள் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நகர, ஒன்றிய, பேரூர், மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு மற்றும் இனிப்பு, கார வகைகள் வழங்கி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தொடர்ந்து கழகப் பணிகளை சிறப்பாக பணியாற்றிட ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.