கரூர் - சேலம் சாலையில் இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது இளம்பெண் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
கரூர் - சேலம் சாலையில் இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது இளம்பெண் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
கரூர் - சேலம் சாலையில் இளைஞர் ஓட்டிய டூவீலர் மீது இளம்பெண் ஓட்டிய டூவீலர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் ராஜா வயது 37. இவர் அக்டோபர் 24ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், கரூர்- சேலம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள ஜே.கே ஹாலோ பிளாக் கம்பெனி அருகே சென்றபோது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், காருண்யா மருத்துவமனை அருகே வசித்து வரும் ராமகிருஷ்ணன் மனைவி பிரேமா வயது 33 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சுசுகி அக்செஸ் 125 வாகனம், ராஜா ஓட்டி சென்ற ஹோண்டா சைன் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜாவுக்கு இடது கால் பாதம், இடது கால் தொடை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராஜாவின் மனைவி சூர்யா வயது 27 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பிரேமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.