திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஓரணியில் கை கோர்ப்போம் -சமூக ஆர்வலர்களுக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் அழைப்பு

திருமணிமுத்தாறு மீட்பு திட்டம் இக்குழுவில் இணைபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.811100199 இந்த எண்ணிற்கு தங்களின் முழு விவரங்களுடன் வாட்ஸ் அப் பதிவு செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Update: 2024-10-31 15:26 GMT
இதுகுறித்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S. மாதேஸ்வரன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... காவிரி ஆற்றின் துணை நதியான விளங்கி வந்த திருமணிமுத்தாறை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலு பெற்றுள்ளது.காவிரி திருமணி முத்தாறு‌ இணைப்பு திட்டம் நிறைவேற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ நடைபயணம், இருசக்கர வாகன பேரணி மற்றும் கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம், சட்டமன்றத்தில் வலியுறுத்தல், தமிழக முதல்வரிடம் தொடர்ந்து நேரில் கோரிக்கை என பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் இத்திட்டம் முழுமையான வெற்றி பெற ஈஸ்வரன் எம்எல்ஏ ஆலோசனைப்படி நாமக்கல், சேலம்,திருச்சி மாவட்டங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிக்க அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பவித்திரம் வரை சுமார் 132.305 கிலோமீட்டர் நீளத்திற்கு சேர்த்து திட்டமிடப்படுகிறது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இதன் மூலம் சுமார் 50,000 ஏக்கர் வரை பாசனம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
சுமார் 50 ஆண்டுகாலம் இத்திட்டத்திற்காக பல்வேறு தரப்பினர் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சேலம்,நாமக்கல்,திருச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயன்பெறலாம். மேலும் இதன் மூலம் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, தாத்தையங்கார் பேட்டை ஆகிய பகுதிகள் நிரந்தரமாக பயனடையும்.இவ்வளவு சிறப்பு மிக்க காவிரி திருமணிமுத்து திட்டத்தை நிறைவேற்ற நம் எதிர்கால சந்ததிகளுக்கு இயற்கையின் கொடையை முழுமையாக தர அரசுக்கு நாம் உதவும் பொருட்டு உணர்த்தும் பொருட்டு இத்திட்டத்தை நிறைவேற்ற எழுச்சியாக தன்னார்வாலர்களை இணைக்கும் பணியை ஆரம்பித்து விட்டது.
காவிரி திருமணிமுத்தாறு மீட்பு திட்டம் இக்குழுவில் இணைபவர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் 8111001999அல்லது இந்த எண்ணிற்கு தங்களின் முழு விவரங்களுடன் வாட்ஸ் அப் பதிவு செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு சில மாதங்களில் தன்னார்வலர்கள் விபரங்கள் பெறப்பட்டு கூட்டம் நடத்தப்படும் என்பதையும் மகிழ்வுடன் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News